குடிக்க பணம் கேட்டு தாயை துன்புறுத்திய மகன்..

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியை அடுத்துள்ள பாலாடி பகுதியை சார்ந்தவர் தோபியாஸ். 32 வயதுடைய இவர் பணிக்கு செல்லாமல் ஊரை சுற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும், மது போதைக்கும் அடிமையாகியுள்ளார்.

இவரது தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதியடைந்த நிலையில்., திருச்சூரை சார்ந்த செவிலியர் ஒருவர் இவரது இல்லத்திற்கு வந்து அவரை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மது பழக்கத்திற்கு அடிமையான அவர் தினமும் தனது தாயாரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்., அதே போல் நேற்று குடிபோதையில் தள்ளமாடிய நிலையில் வந்த அவர் தனது தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

அந்த சமயத்தில் இல்லத்தில் இருந்த செவிலியர் லோரன்ஸ், இதனை கண்டிக்கவே இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தோபியாஸ் அவரை அவதூறாக பேசவே, ஆத்திரமடைந்த லோரன்ஸ் அவரது வயிறு மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தினார்.

இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரது பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் செவிலியர் லோரன்ஸை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: