ராசி பலன்கள் ரி‌ஷபம் பற்றி தெரியாத தகவல்

ராசிநாதன் சுக்கிரன், குரு இருவரும் இணைந்து ராசியைப் பார்ப்பதும், யோகரான புதன் சனி சம்பந்தம் பெறுவதும் இந்த மாதம் ரி‌ஷபராசிக்கு நற்பலன்களைத் தருகின்ற அமைப்பு என்பதால் உங்களில் சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த தனலாபங்கள் உள்ளிட்ட அனைத்தும் இப்போது கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடத்தில் வேலை உண்டு. திருமணப் பருவத்தினர் சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தையும் மீறி சில நன்மைகள் நடக்கும் மாதம் இது.

உறவு, நட்புகளில் இருந்த மனக்கசப்பு விலகும். சிறிய வி‌ஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு நன்மைகள் உண்டு. குடும்பத்தில் சந்தோ‌ஷமான நிகழ்ச்சிகளும் சிலருக்கு பொருள் சேர்க்கையும் இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப நிகழ்ச்சிகள் உண்டு. வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். தம்பதிகள் உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ரி‌ஷபநாதன் சுக்கிரன் மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசியைப் பார்க்கும் நிலையில் இருப்பதும், ராசியின் யோகாதிபதிகளான சனியும், புதனும் நல்ல நிலையில் இருப்பதும், உங்களின் பணவரவுகளையும், தனலாபம் மற்றும் பொருளாதார மேன்மையை அதிகப்படுத்தும் ஒரு அமைப்பு என்பதால் மார்கழி மாதம் பணச்சிக்கல்கள் உங்களுக்கு இருக்காது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: