போலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்

லுட்சேர்ன் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய நிதி கணக்கு வழக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் கூட்டம் 19 .1. 2019 சனிக்கிழமை மாலை 3.30 மணி முதல் ஆரம்பம் ஆனது. இந்த கூட்டத்துக்கு திருப்பணி நிதி தந்தவர்கள் அங்கத்தவர்கள் பூசை செய்பவர்கள் மற்றும் தொண்டர்கள் எல்லோருக்கும் கடிதங்கள் போடப்பட்டு இந்தக் கூட்டமானது நடைபெற்றது. அங்கு நிதி கணக்கு அறிக்கை ஆதாரபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த நிதி கணக்கு அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்திற்கு வருகை தந்தவர்கள் எதிர்காலத்தில் இன்னும் ஆலயத்தை சிறப்பாக நடத்தி அதன் வளர்ச்சி சிறக்க வேண்டும். அம்பாளுடைய இந்த ஆலயத்தை சிறப்பாக வளர்க்க வேண்டும் என்ற  கருத்தை முன்வைத்தார்கள். அதைத்தொடர்ந்து ஆலய குருக்கள் அவர்கள் ஆலயத்தின் உடைய எந்த விதமான சந்தேகங்கள் இருந்தாலும் எந்த நேரத்திலும் நேரடியாக தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்பதையும் கூறியிருந்தார்.ஆலயத்தின் நிதி கணக்கு வழக்குகள் ஆலயத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் இருக்கின்றன, அது சம்பந்தமாக ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்பதையும் ஆலய ஸ்தாபகர் ஆலய குருக்கள் அவர்கள் கூறியிருந்தார்.

ஆலயம் சம்பந்தமாக அனாமதேய  விடயங்களுக்கும் ஆலயம் பதிலளிக்க தயாராக இல்லை என்ற கருத்து மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆலயம் சிறந்த முறையில் இயங்குகின்றது நீதியாகவும் நேர்மையாகவும் ஆதாரபூர்வமாக கணக்கு வழக்குகள் இருக்கின்றன. எனவே எந்த ஒரு அனாமதேய விடயத்தையும் எண்ணி கலங்கத் தேவையில்லை, பயப்பட தேவையில்லை என்று மக்களால் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் வளர்ச்சியை தடுக்க கூடிய எந்த அனாமதேய விடயங்களும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் பொறுப்புகளை செய்பவர்களும் கடமைகளை செய்பவர்களும். அனாமதேய விடயங்களை செவிமடுக்காது தங்கள் இறை தொண்டை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமுகமாக இனிதாகவும் கூட்டம் நிறைவு பெற்றது

போலி முகநூல் , இணையதளங்கள் , whatsapp செய்திகள் மத்தியிலும் உறுதியுடனும் நிதானத்துடனும்தெளிவுடனும் நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் இந்த சுவிஸ் நாட்டு லுட்சேர்ன் மக்கள் போல உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களும் செயல்பட்டால் உண்மையாகவே போலி அனாமதேயங்கள் செயலிழந்து போகும்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: