நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் இந்திய அணிவெற்றி!!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் இந்திய அணிவெற்றிபெற்றுள்ளது.

35 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றதனால் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

வெலிங்டனில் நடைபெற்ற ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன் படி களமிறங்கிய அவ் அணி ஆரம்பத்தில் 18 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டைகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும் பின்னர் இணைந்த விஜய் சங்கர் மற்றும் அம்பத்தி ராயுடு ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். பின்னர் அணியின் ஓட்டம் 116 ஆக அதிகரித்த போது, விஜய் சங்கர் 45 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மத்திய துடுப்பாட்ட வீரர்களின் உதவியுடன் இந்திய அணி, 49.5 ஓவர்கள் நிறைவில் 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பில் அம்பத்தி ராயுடு 90 ஓட்டங்களையும், ஹார்டிக் பாண்டியா 45 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் மாட் ஹென்றி 4, ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட்களையும் வீழ்த்தினார்கள்.

இதன் பின்னர் 253 என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 44.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 217 ஓட்டங்களை பெற்று 35 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அவ்வணி சார்பில் ஜேம்ஸ் நீஷம் 44, கேன் வில்லியம்சன் 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் யூசுவெந்திர சஹால் 3 விக்கெட்களையும் மொஹமட் ஷமி மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

இதனால் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என கைப்பற்றியுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக அம்பத்தி ராயுடு தேர்வு செய்யப்பட்டார்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: