தமிழர் நலன் சார்ந்த பிரதான கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார்: வேல்முருகன்

தமிழர் சார்ந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் பிரதான கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி, இண்டூரில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தல் தொடர்பான முறையான அறிவிப்பு வெளியான பின்னர் எமது முழுமையான நிலைப்பாட்டினைத் தெரிவிப்போம்.

எமது கோரிக்கைகளை தமது அரசியல் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கின்ற அரசியல் கட்சிகளுடன் நாம் கூட்டணி அமைப்பதற்குத் தயார்.

அதனடிப்படையிலேயே அவர்களை நாம் ஆதரிப்பதா அல்லது கூட்டணியில் இடம்பெறுவதா எனத் தீர்மானிக்கவுள்ளோம்.

தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியான பின்னரே எமது மாநிலப் பொதுக்குழுவினைக் சூட்டி நாம் இறுதி முடிவுகளை எடுப்போம்” என வேல்முருகன் மேலும் குறிப்பிட்டார்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: