மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க!!!

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க, ஆளும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அ.தி.மு.கவுடன் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

எவ்வாறாயினும் அ.தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணிதான் எதிர்வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும்.

அத்துடன் பா.ஜ.க.வுடன் தற்போது தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பெப்ரவரி 20 ஆம் திகதிக்குள் இது தொடர்பான இறுதி முடிவுகள் வெளியாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: