தெற்கு லண்டனில் கத்திக்குத்து..!!

தெற்கு லண்டன் பற்றஸி பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.52 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 19 வயது இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவசர சிகிச்சை பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட கடும் முயற்சிகள் பலனளிக்காத நிலையில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் 19 மற்றும் 27 வயதுடைய இரு ஆண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: