கலிடன் வெடிப்புச் சம்பவம்

கலிடன் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளை அடுத்து நான்கு வீடுகள் ‘பாதுகாப்பற்றதாக’ உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலிடன் கிராமத்திற்கு அருகே மப்பிள் கிரோவ் வீதி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6:20 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் அடுத்து அங்கு குடியிருந்த மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் 22 வீடுகள் சேதமடைந்ததுடன் சுமார் 30 முதல் 35 பொதுமக்கள் தமது உடமைகளை இழந்தனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை 7 வீடுகளில் மீட்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கையை அடுத்து வீட்டின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் குறித்த பகுதியில் உள்ள நான்கு வீடுகள் ‘பாதுகாப்பற்றதாக’ உள்ளது என மீட்பு படையினர் அறிவித்துள்ளனர். அத்தோடு குறித்த பகுதியில் தொடர்ந்தும் மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: