இணையத்தை கலங்கடித்த பிரியா வாரியாரின் லிப்-லாக் வீடியோ!

தமிழ் திரையுலம் உள்பட நாடுமுழுவதும் இணையத்தில் தேடும் அளவிற்கு ஒரே இரவில் பிரபலமானவர் பிரியா ப்ரகாஷ் வாரியர். மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘மாணிக்ய மலரே பூவி’ பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர்.

இப்பாடலினை ரசிகர்கள் பலரும் தங்கள் பானிக்கு தொகுப்பு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலப் படுத்தினர். இந்த வீடியோவில் இருந்த பிரியா வாரியர் மட்டும் இளசுகளின் மனதினை கொள்ளையடிக்க வில்லை, மற்றொரு நடிகையுமான நூரின் செரிப் என்பவரும் பலரால் நோட்டம் விடப்பட்டார்.

இதையடுத்து, பிரியா வாரியர் என்றாலே இவர் இடம்பெற்றுள்ள கண் சிமிட்டும் பாடல் காட்சிகள் கண் முன்னே தோன்றும் அளவிற்கு இவர் கண் சிமிட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த பாடல் யூ-டியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை சுமார் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது.

இந்தப்பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலாகி வந்தது. ஒரே நாளில் சன்னி லியோனையே பின்னுக்குத்தள்ளியவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.

அவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சதிறக்கும் மேல் ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து, சியத் ஷாஜகன் மற்றும் நூரின் ஷெரீஃப்-ன் நடிப்பில் ஒரு காதல் நகைச்சுவை படமாக மலையாளத்தில் கடந்த காதலர் தினத்தன்று வெளியானது.

இதையடுத்து, இப்படம் தெலுங்கில் வருகின்ற பிப்ரவரி 14, 2019 வெளியாக உள்ளது. இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் லிப்-லாக் காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: