பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

இலங்கையில் அண்மைகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றுக் கொண்டுவருகின்றன. மேலும் அதிகளவில் எ.டிஎம் களில் தான் கொள்ளைகள் இடம்பெற்றுகின்றன. இதை செய்யும் சந்தேகநபர்களை கைது செய்யவேண்டும் என எ.டி.எம் உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

குறித்த திருட்டுகள் தனியார் வங்கி எ.டி.எம் தவிர அரசு வங்கி எ.டி.எம் களிலும், கொள்ளைகாரர்கள் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இப்படியே நீடித்தால் இலங்கை மிக விரைவில் பாரிய பிரச்சனையை சந்திக்கும்.

இதேவேளை குறித்த கொள்ளைகாரர்களை பிடிக்க குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர். இதன்மூலம் கொள்ளைகாரர்களை விரைவில் பிடிக்க முடியும் எனவும் நாட்டில் நடக்கும் குற்றங்களை தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.

மேலும், வெளிநாட்டவர்கள் உட்பட பலரினால் குறித்த மோசடி இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மோசடி குறித்து தற்போது சமூக வலைத்தளத்தில காணொளி ஒன்று பரவி வருகின்றது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: