வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்ப்பதால் என்ன நடக்கும் தெரியுமா

வெங்காயம் என்றாலே அனைவரும் பயப்படுவது அதிசயம் இல்லாத ஒன்றுதான். வெங்காயம் வெட்டினாலே கண்ணிலிருந்து கண்ணீர் வரும் என்று தான் நாம் அனைவரும் அறிகின்றோம்.

ஆனால் அவற்றில் இருக்கும் மருத்துவ குணத்தை யாரும் அறிவதில்லை. இயற்கை நமக்கு அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் வெங்காயம்.

இவை பூச்சிக்கடி, ஆஸ்துமா, சளி, கபம் போன்ற நோய்களிலிருந்து நம்மை காக்கும். சங்க காலத்திலிருந்தே வெங்காயத்தின் மருத்துவ குணத்தை மருத்துவர்கள் அறிந்துள்ளனர்.

பசியுணர்வு இல்லாதவர்கள் வெங்காயத்தை உண்பதால் பசி உணர்வு தூண்டப்பட்டு, உடலின் அழற்சி நீக்கப்பட்டு, உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி அளிக்கப்படுகின்றது.

இத்தகைய மருத்துவ குணம் நிறைந்த வெங்காயத்தின் சிறப்புகளைப் பார்ப்போம்.

பற்களுக்கு நல்லது

வெங்காயம் பெரும்பாலும் பல் சிதைவு மற்றும் வாய் நோயை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. அதிலும் 2-3 நிமிடங்கள் வெங்காயத்தை வாயில் போட்டு மெல்லுவதால், வாய் கிருமிகளை அழிக்க முடியும்.

இதய நோய்களுக்கு சிகிச்சை

வெங்காயம் இரத்த சிவப்பணுக்களை சுத்திகரித்து, இரத்த அழுத்தத்தை போக்கி, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது. முக்கியமாக இதய நோய் மற்றும் மற்ற இதயம் சார்ந்த கோளாறுகளை தடுக்கின்றது.

பொலிவான சருமம்

வெங்காயச் சாற்றுடன் தேன் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து, முகப்பரு இருக்கும் இடத்தில் தடவினால், பிறகு பாருங்கள் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் பொலிவாக காணப்படும்.

இருமலுக்கு சிகிச்சை

வெங்காயம் கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது. அதிலும் வெங்காயச் சாறு மற்றும் தேன் கலவையை சம அளவில் எடுத்துக் கொண்டு சாப்பிட்டால், தொண்டை புண் மற்றும் இருமல் குணமடையும்.

பூச்சி கொல்லியாகப் பயன்படுகிறது

பூச்சி கடி இருப்பின் வெங்காய சாறு சிறந்த நிவாரணத்தைத் தரும். அதிலும் தேனீ கடி மற்றும் மற்ற விஷக்கடிகளுக்கு, இதனை பூசி வந்தால், வலி காணாமல் போகும்.

புற்றுநோய்

வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு.

காது வலிக்கு நிவாரணம்

காது வலி இருந்தால், அப்போது வெங்காயச் சாற்றினை காதுகளில் ஊற்றினால், காது வலி குறையும். அதிலும் காதில் ஒலி கேட்பது போன்ற இடர்பாடு இருப்பின், பருத்தி கம்பளி மூலம் காதில் வெங்காய சாற்றை ஊற்றினால் போதும் தானாக மறைந்து விடும்.

பொடுகுத் தொல்லை

வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான கூந்தலுக்கு மிகவும் இன்றியமையாதது. அதிலும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், வெங்காயச் சாற்றினை தலைக்கு தடவி ஊற வைத்து குளித்தால், பொடுகுத் தொல்லை குறையும்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: