பனை மரத்தில் நிகழ்ந்த அதிசயம்

பனை மரம் ஒன்றில் திடீரென தண்ணீர் பீறிட்டு விழும் அதிசயம் தூத்துக்குடியில் தற்போது நிகழ்ந்து உள்ளது.
தூத்துக்குடியில் உள்ள விவசாயி ஒருவரின் நிலத்தில் பனை மரம் ஒன்று உள்ளது. இந்த பனை மரம் கருகி போயுள்ளது. பல நாட்களாக அப்படியே இருந்த இந்த பனை மரத்தில் திடீரென தண்ணீர் பீறிட்டு வந்துள்ளது.
நிலத்திலிருந்து 8 அடி உயரத்தில், மரத்தின் ஒரு பகுதியில் ஓட்டை போட்டவாறு உள்ளது. இதிலிருந்து எப்படி தண்ணீர் வருகிறது என்றே தெரியாமல் இந்த காட்சியை கண்டவர்கள் பிரமித்து நின்று உள்ளனர். இந்த செய்தி அக்கம் பக்கத்தினருக்கு தெரியவே தற்போது, இந்த காட்சியை பார்க்க ஏராளன பொதுமக்கள் கூடிய வண்ணம் உள்ளனர்.
வறட்சி பகுதிகளில் கூட நீர் இன்றி விளைந்து பயன்தரக்கூடிய பனையில் இருந்து நீர் வெளியேறும் அதிசய காட்சிக்கு பின் உண்மை என்ன என ஆராய்ந்து வருகின்றனர்.
- Previous செம்பருத்தி நடிகை பார்வதிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
- Next மேலூர் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தல்
You may also like...
Sorry - Comments are closed