தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்த நடிகை ஜெயசுதா எடுத்துள்ள அதிரடி முடிவு!

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்திருப்பவர் ஜெயசுதா. இவர் தற்போது அம்மா கேரக்டர்களில் மட்டும் நடித்து வருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது கணவர் திடீரெனெ தற்கொலை செய்துகொண்டது அனைவர்க்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வந்தார் ஜெயசுதா. மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தபோது காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் செகந்திராபாத் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். அதன் பிறகு அவர் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

இந்நிலையில் தற்போது கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் ஜெயசுதா தற்போது மீண்டும் அரசியலில் குதித்துள்ளார். அவர் தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

விரைவில் ஆந்திராவில் வரவுள்ள தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆவார் என கூறியுள்ள ஜெயசுதா, தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துளளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: