சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்!

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் 4 இளைஞர்கள் துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் மன்சூர்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக நேற்று வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற 4 இளைஞர்கள், அந்த சிறுமியை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

அங்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சிறுமியை நான்குபேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 இளைஞர்களையும் தேடி வருகின்றனர். அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: