12-03-2019 இன்றைய ராசிபலன்கள்

12-03-2019 செவ்வாய்க்கிழமை விளம்பி வருடம் மாசி மாதம் 28-ம் நாள். வளர்பிறை சஷ்டி திதி மறுநாள் பின்னிரவு 1.28 மணி வரை பிறகு சப்தமி. கிருத்திகை நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 1.35 மணி வரை பிறகு ரோகிணி. யோகம்:சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 1.35 மணி வரை பிறகு அமிர்தயோகம்.

நல்ல நேரம் 8-9, 12-1, 7-8.
எமகண்டம் காலை மணி 9.00-10.30.
இராகு காலம் மாலை மணி 3.00-4.30.
குளிகை: 12:00 – 3:30.
சூலம்: வடக்கு.
பொது: நத்தம் மாரியம்மன், சென்னை மல்லீஸ்வரர் இத்தலங்களில் உற்சவாரம்பம்.
பரிகாரம்: பால்

 

மேஷம்

குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். இழு பறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.

வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

 

ரிஷபம்

காலை 7.30 மணிமுதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்கமுடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும்.

உறவினர், நண்பர்களால் வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

 

மிதுனம்

ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்கக் கூடும். அண்டை, அயலார் சிலரின்செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம்.

வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

 

கடகம்

ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியம்முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளைஅறிவிப்பீர்கள்.

உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

 

சிம்மம்

உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். புதுப் பொருள் சேரும்.

வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

 

கன்னி

கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.

வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

துலாம்

காலை 7.30 மணி முதல்சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

 

விருச்சிகம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கல்யாணப்பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

 

தனுசு

இதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பழைய உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசிமகிழ்வீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.தொட்டது துலங்கும் நாள்.

 

மகரம்

மற்றவர்களை நம்பிஎந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.

வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

 

கும்பம்

எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலைமுடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

 

மீனம்

தைரியமாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: