பங்களாதேஷில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு இலங்கையிலும் தொடர்பு!

பங்களாதேஷில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் சர்வதேச மாபியா கும்பலொன்றுடன் தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் அண்மையில், டாக்கா நகரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கையின் விசேட பொலிஸ் குழுவொன்று பங்களாதேஷிற்கு கடந்த 3 ஆம் திகதி சென்றது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் அப்பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை உள்ளடக்கிய இருவர் கொண்ட குழுவே இவ்வறு பங்களாதேஷுக்கு சென்றிருந்ததுடன் அவர்கள் முன்னெடுத்த விசாரணைகளிலேயே இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் ஹெரோயின் விநியோகிக்கும் பாதுகாப்பு இல்லமாகவும் மத்திய நிலையமாகவும் செயற்பட்டுவந்த வீடொன்றை கடந்த 2018 டிசம்பர் 31 ஆம் திகதி சுற்றிவளைத்து அங்கிருந்து 336 கோடி ரூபா பெறுமதியான 278 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை மீட்ட விவகாரம் தொடர்பில் பங்களாதேஷ் சிறப்பு பிரிவு பொலிஸார் டாக்கா நகரில் வைத்து ஐவரை கடந்த ஜனவரி இறுதியில் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: