இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை கோரும் அமெரிக்கா!

இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி, கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகவே, இந்த தொகையினை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது.

2020ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அனைத்துலக அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் ஆகியவற்றுக்கு 40 பில்லியன் டொலரை ஒதுக்கீடு செய்யுமாறு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதில், 32.58 மில்லியன் டொலர் இலங்கைக்காக ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல், சிறிய ஆயுதங்களை அழித்தல், மரபுவழி ஆயுதங்களின் பாதுகாப்பு மற்றும் களஞ்சியப்படுத்தல் வசதிகளை முன்னேற்றுதல் ஆகியவற்றுக்கு 5 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி கட்டுப்பாடு மற்றும் எல்லை பாதுகாப்பு திட்டத்துக்கு இலங்கைக்கு 380,000 டொலரை ஒதுக்கவுள்ளதாகவும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், 2020இல் அனைத்துலக இராணுவ கல்வி மற்றும் பயிற்சிகளுக்காக இலங்கைக்கு 9 இலட்சம் டொலர் ஒதுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: