மட்டகளப்பில் கடமை நேரத்திலும் பொலிஸார் செய்த நெகிழ்ச்சியான செயல்!

மட்டக்களப்பு உப்பாறு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாடசாலை மாணவர் ஒருவரை அழைத்து ஒழுங்குபடுத்தி அனுப்பிவைத்துள்ளமை குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த பகுதியில் போக்குவரத்து பாதுகாப்புக் கடமையில் நின்ற குறித்த பொலிஸார் அவ்வழியால் வந்த சிறுவனை அழைத்து அவரது ஒழுங்கின்றி காணப்பட்ட சீருடையினை சரிசெய்துள்ளார். குறித்த சிறுவனின் சட்டைப் பொத்தான் திறந்திருந்த நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு ஒழுங்குபடுத்தியுள்ளார்.

மேலும், பாடசாலைக்குச் செல்லும்போது இவ்வாறு அலங்கோலமாகச் செல்லக்கூடாது எனவும், நன்றாக படித்து முன்னனேற வரவேண்டும் எனவும் குறித்த பொலிஸார் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பலரும் தமது முகநூல் பக்கத்தில் குறித்த பொலிஸாரை பாராட்டியுள்ளனர். தனது கடமையை மட்டும் பாராமல், நாட்டினதும், பொது மக்களின் வாழ்வினோடும் உண்மையான நேசத்தோடு பணியாற்றும் நம்மில் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: