பிரிட்டிஷ் கொலம்பியா பாடசாலையில் தொலைபேசிப் பாவனைக்குத் தடையில்லை!

பிரிட்டிஷ் கொலம்பியா பாடசாலையில் தொலைபேசிப் பாவனையைத் தடைசெய்வதில் ஒன்ராறியோவைப் பின்பற்றாது என அமைச்சு தெரிவித்துள்ளது.

2019-2020 ஆண்டில் பாடசாலைகளில் வகுப்பு நேரங்களில் மாணவர்களின் கையடக்க தொலைபேசிப் பாவனையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்ராறியோவின் கல்வி அமைச்சர் லிசா தொம்ப்சன் நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தார்.

விசேட தேவைகள் கொண்ட மருத்துவ காரணங்களுக்காகவும், பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் தொலைபேசிப் பாவனை அவசியமாகும்.

இந்நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியா கல்வி அமைச்சு ஒன்ராறியோ போன்ற மாகாணக் கட்டுப்பாடுகளை கருத்தில் கொள்ளவில்லை என அமைச்சர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

 

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: