ரொறன்ரோவில் விமானம் விபத்து

ரொறன்ரோ போஸுன்டோன்வில் நகராட்சி விமான நிலையத்திற்கு அருகே விமானம் ஒன்று வீழந்து விபத்துக்குளானது.

இந்த விபத்து தொடர்பாக கனேடிய மத்திய போக்குவரத்து பாதுகாப்பு சபை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சிறியரக விமானம் நேற்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் 16 வது அவென்யூ மற்றும் நெடுஞ்சாலை 404 பகுதியில் வீழ்ந்ததாகவும், அதில் பயணித்த இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓடுபாதையில் காணப்பட்ட குறைபாடும் இந்த விமான விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களை சேகரித்து வருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்துவரும் போக்குவரத்து பாதுகாப்பு சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமான விபத்தினை அடுத்து நெடுஞ்சாலை 404ற்கும் வூட்பைன் அவனியூவுக்கும் இடைப்பட்ட பகுதியூடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருந்த போதிலும், மாலை 5.30 அளவில் அவை மீண்டும் திறந்து விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: