போயிங் விமான சேவைக்கு தடை

பல்வேறு நாடுகள் போயிங் விமான சேவைகளை நிறுத்தியுள்ள நிலையில், கனடாவும் போயிங் விமான சேவையை  நிறுத்த தீர்மானித்துள்ளது.

கனடாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் மார்க் கர்னோவ் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக ‘போயிங் 737 மேக்ஸ் 8’ மற்றும் ‘போயிங் 737 மேக்ஸ் 9’ விமானங்கள் கனடாவில் இருந்து புறப்படவோ, கனடாவுக்கு வரவோ அல்லது கனடா வான் எல்லையில் பறக்கவோ தடை விதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் 18 கனேடியர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்தனர். எனினும் போயிங் ரக விமானங்களை தொடர்ந்தும் சேவையில் ஈடுப்படுத்துவதாகவும் விமானம் குறித்து ஆராயப்படும் எனவும் கனேடிய  போக்குவரத்து அமைச்சு அதன்போது தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது போயிங் ரக விமான சேவைகளில் இருந்து நிறுத்துவதாக கனடா தெரிவித்துள்ளது. இதேவேளை போயிங் விமான சேவைகளை போயிங் நிறுவனம் இடை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: