கிளிநொச்சியை நோக்கி யாழ்.பல்கலைக்கழக மாவணர்கள்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது, போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ். பல்கலைகழக சமூகம் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தின் விழிப்புணர்வு ஊர்தி இன்று கிளிநொச்சியை சென்றடைந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்தி பயணம் இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சியை சென்றடைந்தது.

ஜெனிவாவில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என வலியுறுத்தி, எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக இந்த ஊர்தி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: