இலங்கை உட்பட நாடுகளில் முடங்கிய பேஸ்புக்!

இலங்கை உட்பட உலகளாவிய ரீதியாக பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கு பேஸ்புக் நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் இந்த பதிவு தரவவேற்றப்பட்டுள்ளது.

இது இணைய வழி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு அல்ல வென்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் தொழிற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கான காரணத்தை அந்த நிறுவனம் இதுவரை விளக்கவில்லை. 2008 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு பாதிப்பை பேஸ்புக் சந்தித்திருந்தது.

இதுவரை உலகளாவிய ரீதியாக 2.3 பில்லியன் பாவைனயாளர்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றமை குறிப்பிடதக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: