ஜூலி வெளியிட்ட வீடியோவுக்கு குவியும் ஆதரவுகள்!

தேவையில்லாத குற்றச்சாட்டை தன் மீது பரப்புவதால் யாருக்கு என்ன நன்மை என ஜூலி ஒரு வீடியோவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஜூலி சில படங்களில் நடித்து வருகிறார்.

ஜூலி தனது பாய்ஃபிரெண்டுடன் சேர்ந்து பொலிஸ்காரரை தாக்கியதாக நேற்று செய்தி வெளியானது.

ஆனால் ஜூலி அந்த இடத்தில் நான் இல்லை என கூறி மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் விடாத நெட்டிசன்கள் அவரை கண்டமேனிக்கு திட்டி வசைபாடினார்.

இதனால் கொதித்தெழுந்த ஜூலி டிவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் என்னை திட்டுவதால் உங்களுக்கு என்ன வரப்போகிறது? என்னை ஏன் இப்படி காயப்படுத்துகிறீர்கள்?

உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லயா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைப்பார்த்த பலர் கவலைப்படாதீங்கன் ஜூலி சில ஜென்மங்கள் இப்படிதான் இருக்கிறார்கள் என அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: