டக்கு.. டக்குனு “மெஷின்” போல் 6 குழந்தைகள் பெற்ற பெண்..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 4 ஆண் மற்றும் 2 பெண் என மொத்தம் 6 குழந்தைகள் பிறந்துள்ளது.  இத்தனை குழந்தைகளையும் அவர் 9 நிமிடங்களில் பெற்றார்.

முன்னதாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்த பெண் தெல்மா சயாகா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்துக்காக டெக்சாசில் உள்ள பெண்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அங்கு நடந்த பிரசவத்தில் அவருக்கு 6 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 4 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் அடங்குவர். குழந்தைகள் தலா 480 கிராம் முதல் 950 கிராம் வரை எடையுடன் உள்ளன.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த குழந்தைகள்யாவும் காலை 4.50 மணி முதல் 4.59 மணிக்குள் அதாவது 9 நிமிட இடைவெளியில் பிறந்தன. குழந்தைகளும், தாயும் நல்ல நிலையில் உள்ளனர். குழந்தைகள் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

470 கோடியில் ஒரு பெண்ணுக்கு தான் இதுபோன்று குழந்தை பிறக்கும். அந்த சாதனையை தெல்மா முறியடித்து விட்டார்.

இவர் தனது பெண் குழந்தைகளுக்கு ஷினா, ஷீரியல் என பெயரிட்டுள்ளாராம்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: