நாய் குட்டிகளை சீரழித்த கொடூரன்..!!!

பிறந்து சில தினங்களே ஆன நாய் குட்டிகளை பாலியல் உறவுக்கு உட்படுத்திய கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளார்!

சென்னை மாதாவரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 30). இவர் தன் வீட்டிற்கு அருகே உள்ள காலி நிலத்தில் சுற்றி வரும் பிறந்து சில தினங்களே நாய்குட்டிளுடன் உடலுறவு கொண்டுள்ளார். இந்த கொடூரமான சம்பவம் அருகில் இருந்த வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த CCTV காமிராக்களில் பதிவாகியுள்ளது.

கடந்த மார்ச் 14-ஆம் நாள் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்த அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் பாஸ்கரன் கைது செய்யப்பட்டுள்ளார். பாஸ்கரன் இதுபோன்ற காரியங்களில் ஈடுபவடுவது இது முதல் முறை அல்ல எனவும், இதற்கு முன்பாகவும் இதேப்போன்று செய்துள்ளதாகவும் அப்பகுதியில் வசிக்கும் நபர் சாய் விக்னேஷ் தெரவித்துள்ளார்.

முன்னதாக MMDA காலனியில் இரண்டாம் தெருவில் இருந்த நாய் குட்டிகளையும் பாஸ்கரன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தெரிகிறது. அச்சமயத்தில் சாய் விக்னேஷ் அவரை அடித்து எச்சரித்ததாவும், தற்போது அவர் மீண்டும் அதே காரியத்தை செய்துள்ளதாகவும் சாய் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

விலங்கு நல ஆர்வலரான சாய் விக்னேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது பாஸ்கரன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாதாவரம் CCTV காட்சிகள் அடிப்படையில் பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: