டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஸ் – தன்னை நாடு கடத்த வேண்டாம் என டுபாய் நீதிமன்றத்தில் மனு

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதூஸ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என டுபாய் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தான் போதைப் பொருள் வர்த்தகராக பிரபல்யப்படுத்தப்பட்டிருந்தாலும், தான் அவ்வாறானவரல்ல எனவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்பினால், டுபாயிலுள்ள தனது சகல சொத்துக்களையும் இழக்க நேரிடும் எனவும் மதூஸ் அந்த மனுவில் கூறியுள்ளார்.

மதூஸின் மனு குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

டுபாயிலுள்ள நீதிமன்றம் இந்த மனுவுக்கு வழங்கும் தீர்ப்பை வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்க முடியும் எனவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: