நான் உங்களுடன் படுக்கையை பகிர்ந்தால், கதாநாயகனுடன் படுக்க யாரை அனுப்புவீர்கள்?

தமிழில் இந்திர விழா, நான் அவன் இல்லை 2, குரு சிஷ்யன், அரவான் ஆகிய படங்களில் நடித்தவர் சுருதி மராதே. இவர் தயாரிப்பாளர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார். நடிகை சுருதி மராதே டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“நான் 16 வயதிலேயே சினிமா துறைக்கு வந்துவிட்டேன். நிறைய பாராட்டுகளையும், கமராவுக்கு பின்னால் அவமானங்களையும் சந்தித்து இருக்கிறேன். நடிகர்-நடிகைகள் வாழ்க்கை சொகுசாக உள்ளது என்று பலரும் கருதுகிறார்கள். இதில் உண்மை இல்லை. நடிக்க வந்த புதிதில் தென்னிந்திய மொழி படமொன்றில் நீச்சல் உடை அணிந்து நடிக்க சொன்னார்கள்.

நானும் ஒப்புக்கொண்டு நடித்தேன். சில ஆண்டுகளுக்கு பிறகு பிரபலமானதும் நீச்சல் உடை காட்சியில் நடித்ததை வைத்து பலரும் கேலி செய்தனர். அது மனதை பாதித்தது. ஒருமுறை தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். அந்த படத்தில் நான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கூறினார்.

முதலில் நடிப்பு சம்பந்தமான விஷங்களை பேசிய அவர் திடீரென்று படுக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும், ஒரு இரவுக்கு என்றெல்லாம் வேறு மாதிரி பேச தொடங்கினார். அதை கேட்டு அதிர்ச்சியானேன். நான் உங்களுடன் படுக்கையை பகிர்ந்தால் கதாநாயகனுடன் படுக்க யாரை அனுப்புவீர்கள்? என்று கேட்டேன். எனக்காக மட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்காகவும் அப்போது நான் துணிந்து செயல்பட்டேன்.”

இவ்வாறு சுருதி மராதே கூறியுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: