இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை!

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவின் தெற்கு பகுதியில் 6.9 மக்னிரியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புக்கள் குறித்து இதுவரை எந்த செய்திகளும் வெளியாகவில்லை.

27 கிலோமீற்றர் ஆழத்தில் அது மையங்கொண்டிருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சுலவேசி தீவில் நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டதில், 2000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழப்புகளை குறைக்க அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளும் குறைக்கப்பட்டது.

இந்தோனேஷிய சுலவேசி தீவானது அடிக்கடி இயற்கை அனர்த்தத்தினால் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் இப்பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(2ஆம் இணைப்பு)

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுலவேசி தீவின் தெற்கு பகுதியில் 6.9 மக்னிரியூட் அளவில் பாரிய நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: