பிரபல நடிகை சங்கீதா பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திவிட்டார் என சங்கீதாவின் அம்மா பானுமதி புகார் கொடுத்தார்

பிரபல நடிகை சங்கீதா பெற்ற தாயை வீட்டை விட்டு துரத்திவிட்டார் என செய்திகள் பரவியது. தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் சங்கீதாவின் அம்மா பானுமதி புகார் கொடுத்தார்.

அதனால் சங்கீதா பற்றி சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் சங்கீதா தற்போது இந்த சர்ச்சை பற்றி பேசியுள்ளார். சின்ன வயதில் அவர் தனக்கு செய்த கொடுமைகள் பற்றி விளக்கமாக கூறியுள்ளார்.

“பள்ளியில் இருந்து நிறுத்தி 13 வயதிலேயே வேலைக்கு அனுப்பினீர்கள், என்னிடம் பல பிளாங்க் செக்கில் கையெழுத்தி வாங்கிவைத்துக்கொண்டீர்கள், குடிக்கு அடிமையாகி வேலைக்கே போகாத உங்கள் மகன்களுக்காக என்னை சுரண்டினீர்கள். நானாக போராடி வெளியேறும் வரை திருமணம் செய்ய விடவில்லை, என் கணவரை தொல்லை செய்து என் குடும்ப அமைதியை அழித்தீர்கள், இப்போது இப்படி ஒரு பொய் புகார் அளித்துள்ளீர்கள். அனைத்திற்கும் நன்றி. உங்களால் தான் நான் சாதாரண குழந்தையாக இருந்து தற்போது போராளியாக நிற்கிறேன்” என சங்கீதா உருக்கமாக பேசியுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: