அதிகாலையில் கோர விபத்து! 04 பேரின் நிலை…

சிலாபம் – புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்து 04 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றூந்து மற்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

வெள்ளவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த சிற்றூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து ஆரச்சிகட்டுவ காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: