அடுத்த மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்..!!

அடுத்த மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய நீதிமன்றம் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கு முதலாவதாக மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

தமிழ், சிங்கள புத்தாண்டின் பின்னர் எதிர்வரும் வாரத்திற்கு அதனை நிறைவேற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, அளுகோசு பதவிக்கும் 30 பேர் நேர்முக பரீட்சை ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 பேரும் மனநல மருத்துவரிடம் அனுப்பி வைக்கப்பட்டு அவர்களது மனநலம் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: