மின்சாரத்திற்கான தேவை குறைவு

கடந்த இரு வாரங்களுடன் ஒப்பிடுகையில் நேற்றும் நேற்று முந்தினமும், மின்சாரத்திற்கான தேவை குறிப்பிடத்தக்களவு குறைவடைந்திருந்ததாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனை எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.

புதுவருடத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள காரணத்தினால், இவ்வாறு மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மின்சாரத்தை சிக்கனமாகவே பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின் உற்பத்தியை மேற்கொள்ளும் நீர்தேக்கங்களுக்கு அருகில் குறிப்பிடத் தக்களவு மழை வீழ்ச்சி பதிவாகாமையே இதற்கான காரணம் என மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: