பாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி

கல்லூரி மாணவியை எரித்து மரத்தில் தொங்கவிட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள காட்டுப் பகுதியில் உடல் சிதைந்த நிலையில் கடந்த 16-ம் தேதி மரத்தில் தொங்கிய ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் . இதையடுத்து போலீசார் விசாரணையில் அது கடந்த 14 ஆம் தேதி மாயமான நவோதயா பொறியியல் கல்லூரியில் படிக்கும் மது என்ற மாணவியின் உடல் என்று தெரியவந்துள்ளது.

மாணவியின் உடல் கைப்பற்றப்பட்ட பகுதியிலிருந்து தான், தேர்வில் தேர்ச்சி பெறாததால், தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கடிதம் ஒன்று சிக்கியது. ஆனால் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர் எப்படி தூக்கிட்டு பின் எரிந்த நிலையில் இருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உண்மையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் தற்கொலை கூறி வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள் என்று மனித உ ரிமை அமைப்பினர் மற்றும் மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் இது குறித்து மாநில அரசு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர். இதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோர் மெழுகுவர்த்தியுடன் ஊர்வலமாகச் சென்றனர்.

மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து டிவிட்டரில் #JusticeForMadhu என்ற ஹேஷ் டாக் டிரெண்டாகி வருகிறது. இது மட்டுமல்லாமல் 50 ஆயிரம் பேர் மதுவிற்கு நீதிகேட்டு கையெழுத்து இயக்கத்தையும் துவங்கியுள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: