யுத்தத்தில் பெற்றோரை இழந்து: குண்டுவெடிப்பில் கணவனை இழந்து தவிக்கும் சிரிஷாந்தி

மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் போதகரைான தனது கணவரை இழந்து , இன்றும் தான் ஆண்டவரை நம்புவதாகவும், அவரை தாக் சேிப்பதாகவும் கூறி, தன் மனதை தேற்றிக்கொள்ளும் சிரிஷாந்திக்கு பின்னால் சோகம் புதைந்து கிடக்கிறது.

தனது கண்முன்னே குண்டு வெடித்ததபக கூறும் இவர் அத் தேவாலயத்தின் ஆசிரியை ஆவார்.

ஈஸ்டர் திருநாளில் நிகழ்ச்சிகளை செய்வதற்கான முன் ஆய்த்தங்களை கற்பித்து கொடுத்து விட்டு, சிறார்களை விளையாட அனுப்பிய சிரிஷாந்தி பின்னர், சிற்றுண்டிகளை ஆய்த்தப்படுத்தும் பணியில் பிஸியாக நின்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த தற்கொலை குண்டுதாரியை சந்தேகத்துடன் பார்த்த தேவாலயத்தின் காவலாளி அவரை விசாரித்த பின்னர், போதகர்களிடம் முறையிட்டுள்ளார். போதகர்கள் குண்டுதாரியிடம் வாக்குவாதம் செய்யும் போதே குண்டு வெடித்தது என்பதை ஏற்கனவே எமது இணையத்தளத்தின் மற்றுமொரு செய்தியில் படித்திருப்பீர்கள்.

அவ்வாறு வாக்குவாதம் செய்த போதகர்களில் ரமேஷ் ராஜு என்னும் போதகரும் அடங்குவார். இவர் குண்டுதாரியை சந்தேகத்துடன் விசாரித்த போது குண்டுதாரி தன்னை புகைப்படவியலாளர் என்றும், தான் இந்த நிகழ்வை வீடியோ எடுக்க வந்தததாகவும் அறிமுகம் செய்துள்ளார்.

இப்போது போதகர் வீடியோ எடுப்பதெனில் அனுமதி எடுக்க வேண்டும் எனக் கூறி அவரை வெளியில் அழைத்துவந்தபோதே குண்டு வெடித்ததாக சிரிசாந்தி கூறுகிறார்.

ரமேஷ்-சிரிசாந்தி தம்பதிகளுக்கு  14 வயது மற்றும் 12 வயதில் ரூபிக்கா, நிரூபன் என்னும் இரு பிள்ளைகள் உள்ளனர்.

சிரிசாந்தியின் பெற்றோர் அவர் இளம் வயதில் இருக்கும் போதே யுத்தத்தால் காவுகொள்ளப்பட்டார்கள். இதேவேளை, 2004 ஆம் ஆண்டு அவளுடன் கூடவே இருந்த அவளின் அத்தையும் சுனாமியால் உயிரிழந்தால்.

அதன்பின்னர் அநாதை இல்லத்தில் வளர்ந்த சிரிசாந்தி ரமேஷ் என்பவரை திருமணம் முடித்த பின்னர் குடும்ப வாழ்வை சந்தோசமாக வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் ரமேஷிம் குண்டுவெடிப்பில் உயிரிழந்த நிலையில் அவரின் உயிரிழப்பினால் நுற்றுக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், இல்லையேல் 450 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்னும் கூறும் சிரிஷாந்தி தனது பிள்ளைகளை தாங்கியவாறு யேசுவை நம்பி வாழ்வதாக கண்ணீருடன் யேசுபெயரை உச்சரித்தவாறே உள்ளார்.


You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: