பிளே ஓவ் வாய்ப்பை இழந்த கோலி படை!

பிரிமியர் கிரிக்கெட் தொடரிலிருந்து கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி வெளியேறியது. ராஜஸ்தான் சார்பில் கோபால் ஹட்ரிக் சாதனை படைத்தார். மழை காரணமாக போட்டி பாதியில் ரத்தானது.

பெங்களூரிவில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் மோதின. ரொஸ் வென்ற ராஜஸ்தான் கப்டன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். கனமழை காரணமாக 3 மணி நேரம் 26 நிமிடம் தாமதமானது. தலா 5 ஓவர் கொண்ட போட்டியாக நடந்தது.

பெங்களூர் அணிக்கு கப்டன் கோஹ்லி, டிவிலியர்ஸ் ஜோடி அபார துவக்கம் தந்தது. வருண் ஆரோன் வீசிய முதல் ஓவரில் கோஹ்லி இரண்டு சிக்சர் பறக்கவிட, 23 ரன்கள் கிடைத்தது. சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் வீசிய அடுத்த ஓவரின் 4வது பந்தில் கோஹ்லி (25) சிக்கினார். அடுத்த பந்தில் டிவிலியர்ஸ் (10) அவுட்டானார். கடைசி பந்தில் (0) ஸ்டாய்னிஸ் ஆட்டமிழக்க, கோபால் ஹட்ரிக் சாதனை நிகழ்த்தினார். பெங்களூர் அணி 5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணிக்கு சாம்சன், லிவிங்ஸ்டோன் ஜோடி துவக்கம் தந்தது. சாம்சன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணி 3.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்திருந்தபோது, மீண்டும் மழை வர போட்டி ரத்து செய்யப்பட்டது. லிவிங்ஸ்டோன் (12) அவுட்டாகாமல் இருந்தார். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன. இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த பெங்களூர் அணி தொடரிலிருந்து வெளியேறியது.

நடப்பு சீசனில் ஹட்ரிக் சாதனை நிகழ்த்திய 2வது வீரரானார் ஸ்ரேயாஸ் கோபால். இதற்கு முன், பஞ்சாப் அணியின் சாம் கர்ரான் ஹட்ரிக் சாதனை நிகழ்த்தியிருந்தார். பிரிமியர் தொடர் வரலாற்றில் பதிவான 19வது ஹட்ரிக்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: