10 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் நிகழ்ந்த திருமணம்…

பாகிஸ்தானில் 10 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஷிகார்பூர் நகரில் வசித்து வருபவர் முகமது சோமர். 40 வயதான இவருக்கும் 10 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத சிறுமி மணமேடையில் அழுத்துக் கொண்டே இருந்துள்ளார்.

இதனால், திருமணத்தில் கலந்து கொள்ள வந்திருந்த நபர் ஒருவர் பொலிஸாருக்கு புகார் அளித்துள்ளார். பொலிஸார் அங்கு வருவதற்கு முன்பு திருமணம் நடந்து முடிந்துவிட்டது. இருப்பினும், அந்த சிறுமியை அவர்கள் மீட்டதோடு, முகமது சோமரை கைது செய்துள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த சிறுமியின் தந்தைக்கு ரூ.2,50,000 பணம் கொடுத்து மயக்கி திருமணம் செய்ய இருந்ததும், பணத்தின் மீதுள்ள ஆசையால் சிறுமிக்கு 17 வயதாகிறது என அவர் தந்தை கூறியதும் தெரியவந்துள்ளது.

இதில் இவர்கள் இருவரையும் இந்த நிலைக்கு பேசி கொண்டு வந்த திருமண ப்ரோக்கரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: