ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் விடுதலை!

மியன்மாரில் கைதுசெய்யப்பட்ட இரு ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மியான்மரில் 10 ரோஹிங்கயா முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி செய்தி வெளியிட்ட வா லோன், க்யா சியோ என்ற மேற்படி இரு ஊடகவியலாளர்களும் கடந்த 2017 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டனர்.

அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதாக கூறி அவர்களுக்கு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

இதையடுத்து மியன்மார் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா அமைப்பு கண்டனம் தெரிவித்தும் இருந்தது.

இந் நிலையில் இவர்கள் இருவரும் 500 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த நிலையில், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: