குஜராத் மாநிலத்தில் தன்னை கடித்த பாம்பை திருப்பிக் கடித்து கொன்ற முதியவர்…!!

தன்னை கடித்த பாம்பைத் திருப்பி கடித்துக் கொன்று விட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பர்வாத் கலா பாரியா என்ற 60 வயது முதியவர்.

இவர் அங்குள்ள வயல் பகுதிகளில் விளைந்த மக்கா சோளத்தை வண்டியில் ஆட்களுடன் ஏற்றி கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் பாம்பு ஒன்று வந்துள்ளது.

இதைக் கண்ட மற்றவர்கள் பாம்பைக் கண்டு தெறித்து ஓட இந்த முதியவர் மட்டும், நான் பல பாம்புகளைப் பிடித்தவன். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று கூறி கையில் பிடித்துள்ளார். அப்போது அந்த பாம்பு முதியவர் கையில் கொத்தியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர் பாம்பை பதிலுக்குக் கடித்துக் கொன்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த சில மணிநேரத்தில் அந்த முதியவர் மயக்கமடைந்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் விஷம் ஏறியதால் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அஜன்வா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை கடித்த பாம்பை கடித்தே கொன்றுவிட்டு முதியவர் உயிரிழந்துள்ள பலியாகிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: