முஸ்லிம்களின் வீடுகளின் கீழ் இந்து கோயில்கள் கண்டெடுக்கப்பட்டதா?

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் காசி-விஸ்வநாதர் சாலைத் திட்டத்திற்கு 80 முஸ்லிம் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதாக கூறி பல இடிந்துபோன பண்டைய கட்டடங்களை கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், அங்கிருந்த முஸ்லிம்களின் வீடுகளையும் காணொளி எடுத்துள்ளனர். அதற்கு கீழ் 45 பழமையான கோயில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இந்த காணொளி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பல்லாயிரக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த காணொளியின் உண்மைத்தன்மை குறித்து பரிசோதித்தபோது அது தவறானது என்று தெரியவந்துள்ளது.

காசி விஸ்வநாதர் கோயிலை கங்கையுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம் பண்டைய நகரத்தை மறுசீரமைப்பதற்கு பல முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஆலயத்தை சுற்றியுள்ள பாதையை விரிவுபடுத்துவதற்காக வீடுகள் மற்றும் கடைகளை இடிப்பது தவிர்த்து, கங்கையை ஒட்டிய பகுதிகளை சீரமைப்பது, பக்தர்களுக்கான ஓய்வறைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் அரங்குகள் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கும் இதன் மூலம் திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, உணவுகளுக்காகவே ஒரு தெரு, பூசாரிகள், பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் போன்றவற்றையும் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டி வாழும் மக்கள் கருத்து வெளியிடும் போது,

இந்த குறுகிய பாதைகளை பார்ப்பதற்காக தான் மக்கள் வாரணாசிக்கு வருகின்றனர். அவை அழிக்கப்படும் பட்சத்தில் வாரணாசியின் கதையும் அவ்வளவுதான் என்று கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே இனவாதத்தினை ஏற்படுத்தும் வகையில் சமூகவாசிகள் இவ்வாறான தகவல்களை பதிவிடுவதை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: