இந்தியாவில் திருமணவிருந்தில் கலந்துகொண்ட இளைஞன் அடித்துக் கொலை..

திருமண விருந்தின்போது நாற்காலியில் அமர்ந்து உணவு சாப்பிட்ட இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் உத்தராகண்ட மாநிலம் தெஹ்ரி கார்வால் பகுதியை சேர்ந்த இளைஞன் திருமண விருந்து ஒன்றில் நாற்காலியில் அமர்ந்து உணவு உண்டுள்ளார். இதனை கண்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இளைஞன் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக இளைஞனின் சகோதரி கொடுத்த புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இளைஞனின் மாமா கூறும்போது, “ தூரத்து உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நாங்கள் எல்லோரும் சென்றோம். நாங்கள் அனைவரும் ஒரு இடத்தில் இருந்தபோது, அவன் மட்டும் சாப்பிடுவதற்காக பந்திக்கு சென்றார். அந்த நேரத்தில் அவன் தாக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இளைஞன் தாக்கப்பட்டபோது அவரை காப்பாற்ற நண்பர் ஒருவர் முயற்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “

நாற்காலியில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அதனை பார்த்த மற்றொரு சமூகத்தினருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

எனவே அவரின் தட்டை எட்டி உதைத்து சாப்பாட்டை தட்டி விட்டனர். பின்னர் அவரை மிதித்து கடுமையாக தாக்கினர். இதனால் அவர் அங்கிருந்து நகர்ந்து வீட்டை நோக்கி புறப்பட்டார்.

ஆனால் அந்த கும்பல் பின்தொடர்ந்து சென்று மீண்டும் தாக்கியது. அவர் எப்படியோ சமாளித்துக் கொண்டு அன்றிரவே வீடு திரும்புள்ளார்.

ஆனால் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் முற்றத்தில் படுத்துவிட்டார். அதிகாலையில் அவர் அம்மா வந்து பார்த்தபோது சுயநினைவு இல்லாமல் இருந்தது தெரியவந்தது. உடடினயாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிழந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: