சிலாபத்தில் பெரும் பதற்றம்… !! காரணம் என்ன ??

சிலாபம் ஊரடங்கு சட்டத்தில் பொலிசார் மாற்றம் செய்துள்ளனர். நாளை காலை 6 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்குமென முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும், தற்போதைய அறிவித்தலின்படி நாளை அதிகாலை 4 மணிக்கு ஊரடங்கு விலகப்படும்.

சமூகவலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

சிலாபத்திலுள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகம் அமைந்துள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முகநூலில் வந்த செய்தி ஒன்றையடுத்து அதன் உண்மைத்தன்மையை கூறுமாறு கோரி சிலாபத்தில் இன்று காலை நடந்த ஆர்ப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சிலாபம் நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தக பிரமுகர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் இந்த செய்தியை எழுதியதாக வன்முறையில் ஈடுபட்ட கும்பல் குற்றம்சாட்டியது. இன்று மட்டுமே  சிரிப்பீர்கள், நாளையிலிருந்து அழுவீர்கள் என்ற சாரப்பட அவர் எழுதியதாக கும்பல் குறிப்பிட்டது.

பொலிஸ் நிலையம் அருகே வந்த இளைஞர் குழு இந்த செய்திகளின் உண்மைத்தன்மையை கூறுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து கடைகள் அனைத்தும் நகரத்தில் மூடப்பட்டன.

ஆர்ப்பாட்டக்காரர்களை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைத்த இராணுவம் அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது.

இதனையடுத்து சிலாபம் பொலிஸ் பிரிவில் இப்போது முதல் நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: