இலங்கைக்கு தேன்னிலவு கொண்டாட வந்த தம்பதிக்கு நேர்ந்த துயரம்!

இலங்கைக்கு தேனிலவுக்கு வந்த பிரித்தானிய இளம்பெண்ணொருவர் மர்மமாக மரணமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலியில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் திடீரென வாந்தியெடுத்து, மரணமானார்.

பிரித்தானியாவை சேர்ந்த உசேலா பட்டேல் (31) அவரது கணவன் கிலான் சந்தரிய (33) ஆகியோர் ஒரு மாதத்தின் முன்னர் திருமணம் செய்தனர். தேனிலவை கழிக்க இலங்கைக்கு வந்தனர். காலியிலுள்ள விடுதியொன்றில் அவர்கள் தங்கியிருந்தனர்.

ஹோட்டல் ஒன்றில் சாண்ட்விச் வரவழைத்து சாப்பிட பின்னர் வொட்கா அருந்தியுள்ளனர். அதன்பின் இருவரும் நிலத்தில் வீழ்ந்துள்ளனர்.

சாண்ட்விச், வொட்கா போத்தல் என்பன தற்போது அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஹோட்டலை சுற்றியுள்ள சிசிரிவி கமரா பதிவுகளின் படி வெளியாரின் தலையீடு இந்த விவகாரத்தில் இல்லையென பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகள் முடிவடையும் வரை கணவன் சந்தரியவை நாட்டில் இருக்கும்படி பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: