ரஜனி போனால் என்ன – சீமானின் சீற்றம்

ரஜினி இலங்கைக்கு வருவது சிறப்பான விஷயம்’, ‘ரஜினி, யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும்’ என்று எதிரும் புதிருமாக அறிக்கை அரசியல் சூடு கிளப்பி வந்த நிலையில், ‘விழாவுக்கு நான் செல்லவில்லை’ என்று தன்னிலை விளக்கம் அறிவித்து சூட்டைத் தணித்திருக்கிறார் ரஜினி.

இது குறித்து சீமான் தெரிவிக்கையில்

”இனப்படுகொலை குறித்த விசாரணையை இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிப்போடுவதாக செய்திகள் வந்த அடுத்த நாளே ரஜினிகாந்த் இலங்கை செல்லவிருக்கிறார் என்ற செய்தியும் வருகிறது. ஆனாலும் நான் உடனடியாக விசாரித்தேன். ரஜினி அப்படி எந்த நிகழ்விலும் பங்கேற்கவில்லை என்பது உறுதியானது. அதனால்தான் அதுபற்றி மேற்கொண்டு நான் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை.”

சிங்களர்களோடு சமரசம், சமாதானம் பேசி சகோதரத்துவத்தோடும் நட்போடும் எதையும் பெற முடியாது என்பதுதான் 60 ஆண்டுகால வரலாறு. எனக்கு என்ன இழப்பு – வலி ஏற்பட்டுள்ளதோ இதே இழப்பும் – வலியும் என்றைக்கு சிங்களனுக்கு ஏற்படுகிறதோ அன்றைக்குத்தான், நம்மோடு அவன் சமரசம் பேச முற்படுவான். அதுவரையிலும் இதைப்பற்றிப் பேசிப் பயனில்லை. இதற்கிடையில், அங்கே ரஜினி போனால் என்ன, மோடி போனால் என்ன… யார் போயும் ஒரு பயனும் கிடையாது.”

You may also like...

0 thoughts on “ரஜனி போனால் என்ன – சீமானின் சீற்றம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: