மனிதன் இறப்பதற்கு அதிகம் காரணமான விலங்கு இதுதான்… என்னது இதுல காஃபியும் அடங்குமா?

நம்முடைய வாழ்க்கையில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்த்திருப்போம். கேட்டிருப்போம். அதில் நிறைய நம்மை ஆச்சர்யப்படுத்தி இருக்கும். சில நம்மை அருவருப்பு அடையச் செய்திருக்கும்.

குறிப்பாக பன்றியை நினைத்தாலே நிறைய பேர் அருவருப்பாவது உண்டு. ஆனால் அதில் என்ன சுவாரஸ்யம் தெரியுமா? பன்றியால் நேராக அன்னாந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாது. இதுபோன்ற சுவாரஸ்ய தொகுப்பு தான் இது.

மிக ஆழமான கிணறு

3500 படிக்கட்டுக்கள் கொண்ட ஆழமான கிணறு தான் இது. ராஜஸ்தான் மாநிலத்தில் அபனேரி என்னும் பகுதியில் தான் இந்த கிணறு உள்ளது. இது கிட்டதட்ட 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

மின்னல்

உலகில் மின்னல் தாக்குவதால் அதிக அளவில் உயிர் இழப்பவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தர்கள் தானாம்.

பன்றி

பன்றியால் தலை நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாது. இது இதுக்கு முன்னாடி உங்களுக்குத் தெரியுமா?…

இடது கையால்

கீபோர்டில் இடது கையினால் மட்டுமே டைப் செய்யக்கூடிய வார்த்தை ஒன்று ஒன்று தான் இருக்கிறது. அது என்ன தெரியுமா? stewardesses என்பது தான். எப்படி டைப் செய்தாலும் அந்த வார்த்தை இடதுகையால் மட்டும் தான் பண்ண முடியும். ஏனென்றால் இந்த வார்த்தையில் உள்ள எல்லா எழுத்துக்களும் கீபோர்டின் இடதுபக்கத்தில் இருப்பவை.

கொசு

உலகில் அதிக மனிதர்கள் இறந்து போவதற்குக் காரணமான விலங்கு எது தெரியுமா? அதிர்ச்சியிலேயே செத்திடாதீங்க. அது வேற எதுவும் இல்ல. கொசு தான்.

கோலம்

என்ன அப்படி பார்க்கறீங்க? இதுல அப்படி என்ன பெருசா இருக்குனு கேட்கறீங்களா? நல்லா பாருங்க. அது ஏபிசிடி கோலம். a ல இருந்து Z வரைக்கும் இந்த கோலத்துக்குள்ள இருக்கு பாருங்க.

ஏழு கிளை பனைமரம்

தென்னை, பனை மரங்கள் கிளையில்லாமல் நீண்டு உயர்ந்து காணப்படும். இவற்றிற்கு கிளைகள் இருந்து யாரும் பார்த்திருக்க முடியாது. ஆனால் இந்த படத்தில் பாருங்கள். ஏழு கிளைகள் கொண்ட பனை மரத்தை. இது கிட்டதட்ட உலக அதிசயங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.

காது கூர்மை

பாம்பு காது என்று சொல்கிறோமே அதைவிடவும் அதிக கேட்கும் திறன் கொண்ட பறவை ஒன்று இருக்கிறது தெரியுமா? அது கிளி தான். ஆமாங்க கிளிக்கு மிக அதிக செவி கேட்கும் திறன் இருக்கிறதாம்

காபி

தொடர்ந்து 42 கப் காபி குடித்தால் உடனடியாக அந்த நபர் இறந்து போய்விடுவாராம். காபி பிரியர்கள் இதை கொஞ்சம் கவனத்துல வெச்சிக்கிட்டா நல்லது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: