தேசிய தௌஹீத் ஜமாத் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில்?

தேசிய தௌஹீத் ஜமாத் திவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் உள்ளதாக காவல்துறை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த பணியாளர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்ட போது இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

சஹஜான் என்ற குறித்த சந்தேக நபர், தௌஹீத் ஜமாத் அமைப்பு பற்றிய பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.

தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவராக கடமையாற்றிய சஹ்ரான் ஹாசீம் மற்றும் பிரதேச மட்ட தலைவர்களினால் நாட்டின் பதினேழு இடங்களில் பயிற்சி முகாம்கள் நடத்திச்செல்லப்பட்டுள்ளன.

இந்த பயிற்சி முகாம்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயிற்சி பெற்றுக்கொண்டவர்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வனாத்தவில்லு, நுவரெலியா, குருணாகல், சம்மாந்துறை, அக்கரைப்பற்று, கல்முனை, ஹம்பாந்தோட்டை, கண்டி உள்ளிட்ட 17 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது என தெரிவிக்;கப்படுகிறது

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: