விலையுயர்ந்த காரின் மீது சாணியைப் பூசிய யுவதி! இப்படி ஒரு காரணமா?

அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாணியை வித்தியாசமாக பயன்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கோடையில் சுட்டெரிக்கும் 45 டிகிரி வெயிலில் தன்னையும் தன் காரையும் காத்துக்கொள்ள காரை சாணியால் மெழுகியுள்ளார்.

கிராமப் புறங்களில் வீட்டுத் தரையில் சாணியைக் கரைத்துவிட்டு மெழுகுவது வழக்கம். இந்தக் காலத்தில் பல வீடுகளும் டைல்ஸுக்கு மாறிவிட்டதால், சாணியால் தரையை மெழுகும் பழக்கம்கூட தற்போது அரிதாக உள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிக்கும் பெண் சேஜல் ஷா தன் காரை வெயிலிலிருந்து பாதுகாத்து குளிர்ச்சியாக இந்த நூதன ஐடியாவைக் கண்டுபிடித்துள்ளார்.

சாணியால் பெயிண்ட் அடித்த காரை ரூபேஷ் கவுரங்க தாஸ் என்பவர் படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டிருக்கிறார். அந்தப் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: