இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதனை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, புதுடில்லியில் வைத்து நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் ,டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ளது.

இலங்கையிலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியும், ஆளுங்கட்சியாக இருக்கலாம் அல்லது எதிர்க்கட்சியாக இருக்கலாம் வேட்பாளர்களை தெரிவு செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேர்தலில் பங்கு கொள்வதா? என்பது குறித்த தனது முடிவை உடனடியாகவே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஏனைய கட்சிகள் தெரிவு செய்யும் வரை தனது தீர்மானம் குறித்து காத்திருப்பேன் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: