உலக சாதனை படைத்த வங்கதேச வீரர்!

ஒருநாள் போட்டிகளில் புதிய உலக சாதனையை வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், வங்கதேச அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் 75 ஓட்டங்கள் விளாசிய ஷகிப் அல் ஹசன், ஒரு விக்கெட்டை வீழ்த்தி உலக சாதனை படைத்தார்.

அதாவது குறைந்த ஒருநாள் போட்டிகளில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதுவரை 199 போட்டிகளில் விளையாடியுள்ள ஷகிப் அல் ஹசன், 250 விக்கெட்டுகளையும், 5 ஆயிரத்து 792 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

ஷகிப்புக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் அப்துல் ரசாக் (258 போட்டிகள்), ஷாகித் அப்ரிடி (273 போட்டிகள்), தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் (296 போட்டிகள்), இலங்கையின் ஜெயசூர்யா (304 போட்டிகள்) ஆகியோர் 250 விக்கெட்டுகளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: