17 வயது சிறுவனுக்கும், 13 வயது சிறுமிக்கும் திருமணம்!

17 வயது சிறுவனுக்கும், 13 வயது சிறுமிக்கும் கிராம பஞ்சாயத்து சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நீண்ட நேரம் கையடக்க தொலைபேசியில் பேசியதால், இரு குடும்பத்திற்கும் ஏற்பட்ட பிரச்சனையை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் தன்னுடைய அத்தை- மாமா வீட்டில் தங்கி இடையிலை மாணவராக பயின்று வருகிறார்.

அதேபகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் மாணவியுடன் இவர் தொடர்ந்து கையடக்க தொலைபேசியில் பேசி வந்துள்ளார்.

இதனால் இரு குடும்பத்தாருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக கடந்த 30ம் திகதியன்று கிராம பஞ்சாயத்து கூடியுள்ளது

அதில் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கிராம பஞ்சாயத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அடுத்த நாளே திருமணமும் நடைபெற்று, இருவீட்டாரும் மகிழ்ச்சியுடன் சேர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் திருமணத்திற்கு எதிராக குழந்தைகள் நல வாரியம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அமைப்பின் தலைவர் ராஜ் குமார் வர்மா, இந்த திருமணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளோம். தகவல்களை சரிபார்த்த பின் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: